பாஜக கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் ஆட்சியை கைப்பற்றியது. அப்போது பாஜகவின் தேசியதலைவராக இருந்த ராஜ்நாத் சிங், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பதவியேற்றார்.

அதனைதொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக அரசு வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் பாஜக தலைவராக இருந்த அமித்ஷா, உள்துறை அமைச்சராக பதவியேற்றார். இதனால் பாஜகவின் புதியதேசிய தலைவரை நியமிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

பாஜகவின் தேசிய தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல்பொறுப்பாளர் ராதா மோகன் சிங் வெளியிட்டார். அதில்தலைவர் பதவிக்கான வேட்புமனுதாக்கல், வேட்புமனுக்கள் பரிசீலனை, திரும்பப்பெறுதல் அனைத்தும் இன்று பகல் 2.30 மணிக்குள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் ஜேபி. நட்டா இன்று பாஜக தேசியதலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல்செய்தார். அவருக்கு பாஜக மூத்த தலைவர்கள் பலர் தங்கள் ஆதரவை தெரிவித்தனர். பின்னர் பாஜகவின் தேசிய தலைவராக ஜேபி. நட்டா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பாஜக தலைவர்கள் வாழ்த்துதெரிவித்து வருகின்றனர்.

Comments are closed.