பாஜகவின் தொலை நோக்கு அறிக்கைக்கு தமிழக மக்களிடையே நல்லவரவேற்பு கிடைத்துள்ளதாக,  மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்தார்.

திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்கான கட்சியின் தேர்தல் அலுவலகத்தை சிந்துபூந் துறையில் சனிக்கிழமை திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

இதரகட்சிகள் வெளியிட்டுள்ளதை போன்று பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. இலவசங்களுக்கு இடம் அளிக்கப்பட வில்லை. முழுவதும் தமிழகத்தின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு தொலைநோக்கு அறிக்கையாக வெளியிட்டுள்ளோம். இதற்கு மக்கள்மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாஜக மட்டுமே உருவெடுத்துவருகிறது. மக்கள் நலக் கூட்டணியானது கட்சிகளைச் சேர்ப்பதில் குழப்பம், பெயர் வைப்பதில் குழப்பம், தொகுதிப்பங்கீட்டில் குழப்பம் என அடுத்தடுத்து சலசலப்பை சந்தித்துவருகிறது.

பாஜகவில் சமூகநீதி உள்ளது. எனவேதான் வேட்பாளர் பட்டியலில் தாழ்த்தப் பட்டோருக்கும், சிறுபான்மையினருக்கும் பெருமளவு இடம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. போலித்தனமான மதமாற்றம் கூடாது. இந்துக்களாக இருப்பவர்கள் பிறமதத்துக்கு செல்லலாம். ஆனால், பிறமதத்தவர்கள் இந்துக்களாக மாறினால் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே, கட்டாய மதமாற்றச்சட்டம் கொண்டு வரப்படும். கற்பதற்கு எல்லையே இல்லை. தமிழைமட்டும் கற்பதாக கூறி வேலை வாய்ப்பில் பின்தங்க கூடாது என்பதற்காக 3 மொழிகளையும் கற்கவும், தாய் மொழியை காக்கவும் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப் பட்டுள்ளது. ஸ்டாலின் முன்னிலைப்படுத்தும் பேறுகால விடுப்பு காலம் உயர்வு, 150 நாள் வேலைத் திட்டம் ஆகியவை மத்திய அரசின் செயல்பாடுகளில் உள்ளவை.

தேர்தல் பிரசாரத்துககு பிரதமர் நரேந்திர மோடி, பாஜக அகில இந்தியத்தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் பலரும் வருகை தரவுள்ளனர். இதற்கான பிரசாரதிட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில், தென்மாவட்டமும் இடம் பெற்றுள்ளது. தென் மாவட்டத்தை புறக்கணிக்க மாட்டோம். தென்மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காக அனைத்து திட்டங்களையும் கொண்டுவந்து சேர்க்க கடமைப் பட்டுள்ளோம். தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை பாஜகவால் மட்டுமே அளிக்கமுடியும் என்றார் அவர்.

Leave a Reply