நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையில் விழுந்த, இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர்கெளதம் கம்பீர் இன்று பாஜக.,வில் இணைந்தார்

இந்திய அணியில் சிறப்பான தொடக்கவீரராக திகழ்ந்தவர் இடது கை பேட்ஸ்மேன் கெளதம் கம்பீர். 2011ல் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.

கிரிக்கெட்டிலிருந்து கெளதம் கம்பீர் ஒதுக்கப்பட்டாலும், சமூகம் சார்ந்த கருத்துக்களால் தொடர்ந்து பலரசிகர்களாலும், பொதுமக்களாலும் பின்பற்றப்படும் நபராக உள்ளார்.

டெல்லி அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி அரசை கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்நிலையில் இன்று பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி மற்றும் ரவிசங்கர் பிரசாத் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார்.

பின்னர் பேசிய கம்பீர், பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை என்னை ஈர்த்தது, பாஜகவில் இணைவதை பெருமையாக பார்க்கிறேன்.

Leave a Reply