குஜராத்தில் தலித் இளைஞர்களை தாக்கியது குறித்து பெரும் பிரச்சினையை தூண்டி விடும் முற்போக்குகளே, மத சார்பற்ற (போலி) நடுநிலையாளர்களே, ஊடகங்களே, இடது சாரிகள், காங்கிரஸ் வாய் சவடால் தலைவர்களே, சமூக நல்லிணக்கம் என்ற பெயரில் சமூகத்தை சீர்குலைக்கும் சாதிய வெறியர்களே,

கடந்த புதன் கிழமையன்று, பீகாரில் முஸாப்பூர் மாவட்டத்தில் ஒரு இரு சக்கர வாகனத்தை திருடியதாக சொல்லப்படுகின்ற இரு தலித் இளைஞர்களை ஒரு அறைக்குள் வைத்து கடுமையாக தாக்கியதோடு, தாக்கியவர்கள் இந்த இரு இளைஞர்களின் வாயில் சிறுநீரை கழித்துள்ள கொடுமை அரங்கேறியுள்ளது. ராஜிவ் குமார் பஸ்வான் என்பவற்றின் தாய் சுனிதா தேவி கொடுத்துள்ள புகாரில் இந்த குற்றச்சாட்டுக்களோடு, அவர்களை மீட்க சென்ற அவருடைய கணவரையும் தாக்கியதாக கூறியிருக்கிறார். ஆனால் இது வரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குற்றம் சாட்டப்பட்டவர் பஞ்சாயத்து தலைவரின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குஜராத் சம்பவத்தில் ஒரு இஸ்லாமியர் உட்பட 9 பேரை உடனடியாக கைது செய்த காவல் துறையையும், அம்மாநில அரசையும் விமர்சனம் செய்ததோடு, அங்கே சென்று மேலும் சாதி கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய ராகுல் மற்றும் அர்விந்த் கெஜ்ரிவாலின் கண்களுக்கு பீகார் சம்பவம் கண்களுக்கு தெரியவில்லையா? அல்லது இந்த செய்தி அவர்களின் காதுகளுக்கு கேட்கவில்லையா? அல்லது பீகார் தலித்துகள் பாவப்பட்டவர்களா? பாஜக அரசு இருக்கும் மாநிலத்தில் இருப்பவர்கள் மட்டும் தான் தலித்துகளா? மற்ற மாநிலங்களில் தலித்துகள் மீது அக்கறை இல்லாது இருப்பது ஏன்?

முற்போக்குகள் இது குறித்து மவுனம் காக்கும் மர்மம் என்ன?

நாராயணன் திருப்பதி.

Leave a Reply