பாஜக ஆட்சிப் பொறுப் பேற்றால் உத்தரப் பிரதேசம் பணக்கார மாநிலமாக மாறும் என்று  தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் ஜான்ஸி நகரில் இன்று நடந்த பிரச்சாரகூட்டத்தில் அவர் பேசியதாவது: சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் கட்சிகளின் ஆட்சியில் ஊழல்கள் அதிகரித்துள்ளன. இதனால் மாநிலத்தின் வளர்ச்சி தடை பட்டுள்ளது.

வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாய்ப்பளியுங்கள். மத்தியில் பாஜக ஆட்சி நடைபெறுவதால் உத்தரப்பிரதேச மக்களுக்கு அதிகபட்ச நன்மைகள் கிடைக்கும். பாஜக ஆட்சி அமைந்தால் உத்தரப் பிரதேசம் பணக்கார மாநிலமாகமாறும்.

பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் பாஜக உறுதியாக உள்ளது. இந்தவிவகாரத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply