பிரதமா் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு ஒருலட்சத்து 68 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டிருப்பதாக கட்சியின் கோவை மக்களைவத் தொகுதி வேட்பாளா் சிபி ராதாகிருஷ்ணன் தொிவித்துள்ளாா்.

அதிமுக கூட்டணியில் கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சி பி இராதாகிருஷ்ணனின் அறிமுககூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் கோவை கவுண்டம் பாளையம் தொகுதிக்குட்பட்ட சரவணம் பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கவுண்டம் பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி எம்எல்ஏ,  உட்பட கூட்டணிகட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளர்சிபி ராதாகிருஷ்ணன் பேசும் போது அதிமுக பாரதிய ஜனதா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் மோடி என்பதை தெளிவாகக் கூறி இருக்கிறோம். ஆனால் திராவிட முன்னேற்றக்கழகம் அதன் கூட்டணிக் கட்சியின் பிரதமர் வேட்பாளரை எந்த இடத்திலும் கூறமுடியவில்லை. பிரதமர் யார் என்று தெரியாமல் களத்தில் நிற்கிறார்கள்.

தமிழகத்திற்கு நிதியை தரவில்லை என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டுகிறார். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்திற்கு 68,000 கோடி நிதிமட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் கடந்த 5 ஆண்டில் பிரதமர் மோடி ஒரு லட்சத்து 68 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கி தந்துள்ளார்.

 

Leave a Reply