பெட்ரோல், டீசல் விலையை மத்தியஅரசு லிட்டருக்கு 2.50 காசுகள் குறைத்துள்ளது. இந்நிலையில் மாநில அரசும் பெட்ரோல், டீசல் வரியை குறைக்க வேண்டும் என மத்திய நிதி யமைச்சர் அருண்ஜெட்லி வலியுறுத்தியுள்ளார். பெட்ரோல், டீசல் விலை குறைப்பால் மத்திய அரசுக்கு 21,000 கோடி இழப்பு ஏற்படும் என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

மேலும் அருண்ஜேட்லியின் கோரிக்கையை ஏற்று பாஜக ஆளும் உத்தரகாண்ட், சட்டிஸ்கர், மத்திய பிரதேசம், அஸ்ஸாம், இமாச்சல பிரதேசம், மகாராஷ்ட்ரா, குஜராத், திரிபுரா , ஜார்க்கண்ட் , கோவா, ஹரியானா, ராஜஸ்தான், அருணாசலப் பிரதேசம் ஆகிய 13 மாநிலங்களில்  ₹2.50 வரை விலை குறைக்கப் பட்டுள்ளது. இதனால் அந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரையும் குறைந்துள்ளது

Leave a Reply