சாதி, மத அரசியலில் பாஜக ஒரு போதும் ஈடுபடாது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்  தெரிவித்துள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ‘இந்துத்துவா’ வழக்கின் தீர்ப்பை நேற்று உச்சநீதிமன்றம் வெளியிட்டது. அந்ததீர்ப்பில் சாதி, மதம், இனம், மொழியின் பெயரால் மக்களிடம் வாக்குசேகரிக்க கட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் சாதி, மதத்தின் பெயரால் வாக்குசேகரிப்பது சட்ட விரோதமானது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப் பட்டிருந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக கூறியுள்ள ராஜ்நாத்சிங், பாஜக ஒருபோதும் சாதி, மத  அரசியலில் ஈடுபடாது எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply