பாஜக கூட்டணியில் சேருவதே விஜய காந்த்தின் முதல்திட்டமாக இருந்தது. பிரேமலதாவும் அதைத்தான் விரும்பினார். ஆனால் திடீரென பிரேமலதா, வைகோவை சந்தித்துப்பேசி கூட்டணியை மாற்றி விட்டார் என்று கூறியுள்ளார் வி.சி.சந்திரகுமார். அதற்குக்காரணம், பிரேமலதா கேட்ட சில கோரிக்கைகளை பாஜக நிராகரித்ததே என்று சந்திரகுமார் கூறியுள்ளார்.
 
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் தேமுதிக.,வின் கூட்டணி தொடர்பான பலரகசியங்களை அம்பலப்படுத்தினார் சந்திரகுமார். அதில் ஒன்று பாஜக.,வுடன் விஜயகாந்த் கூட்டணிவைக்க விரும்பியுத. இதுகுறித்து சந்திரகுமார் கூறுகையில், பாஜக கூட்டணிக்கு போவதுதான் விஜய்காந்த்தின் திட்டமாக இருந்தது.
 
பிரேமலதாவும கூட அதைவிரும்பினார். பாஜக.,வுடன் கூட்டணி அமைவதையே அவரும்விரும்பினார். ஆனால் தேமுதிக விதித்த சிலகோரிக்கைகளை பாஜக ஏற்கவில்லை. இதனால் கூட்டணி அமைய வில்லை. அதேசமயம், வைகோவை நேரில்சந்தித்து மக்கள் நலக்கூட்டணியுடன் தேமுதிக கூட்டணியை ஏற்படுத்தியவர் பிரேமலதாதான் என்றார் சந்திரகுமார்.

Leave a Reply