மக்களவை தேர்தலில் பிரபல இளம்நடிகை பாஜக சார்பில் வேட்பாளராக களமிறங்க உள்ளார்.

மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ள பாஜக கர்நாடகமாநிலம் பெங்களுரு புறநகர் தொகுதிக்கான வேட்பாளராக பிரபல இளம் நடிகை நிஷா யோகேஸ்வர் அறிவிக்கப் பட்டுள்ளார்.

கர்நாடக முன்னாள் அமைச்சர் சன்னபட்னா சி.பி.யோகேஸ்வர் மகள் இந்த நிஷா. தற்போது 28 வயதாகும் நிஷா லண்டணல்லி லம்போதரா என்கிற கன்னடப் படத்தில் அறிமுகமாகி இதுவரை 8 படங்களில் நடித்துள்ளார். திருமணமாகாத நிஷா இப்போது பெங்களூரு புறநகர் தொகுதியில் மக்களவைவேட்பாளராக களமிறங்குகிறார். இவரது தந்தையை பெங்களூரு புறநகர் தொகுதியில் களமிறங்க பாஜக மேலிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆனால், எதிர்த்து களமிறங்கும் காங்கிரஸ் கட்சியைசேர்ந்த டி.கே.சுரேஷ் வலுவான வேட்பாளர் என்பதால் அவர் தனது மகளுக்கு சீட் கொடுத்தால் வெற்றிபெற்று விடலாம் எனக் கூறியுள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட பாஜக தலைமை நிஷாவுக்கு சீட்கொடுத்துள்ளது. முன்னர் நடந்த தேர்தலில் தனது தந்தைக்காக நிஷா பிரச்சாரம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அவரைபார்க்க கூட்டம் அதிகமாக திரண்டுள்ளது. இதனை மனதில்வைத்தே தனது மகளுக்கு சீட் வாங்கிக் கொடுத்துள்ளார் யோகேஸ்வர்.

நிஷா விரைவில் பிரச்சாரத்தை துவங்க உள்ளார். அப்போது அவரைகாண ரசிகர்கள் திரள்வார்கள் என்பதால் தற்போதே போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுசெய்ய தயாராகி வருகிறது.

Leave a Reply