நடிகர் மோகன்லால், தேசியகட்சியான பிஜேபி சார்பில் வரும் தேர்தலில் போட்டியிட போவதாக கூறப்படுகிறது. கேரளா சினிமாவில் சூப்பர்ஸ்டாராக இருந்துவருபவர் நடிகர் மோகன்லால். தமிழகத்தில் ரஜினிகாந்த்துக்கு ரசிகர்கள் எப்படியோ அது போல் கேரளாவில் மோகன்லாலுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி துவங்குவதாக ஏற்கனவே அறிவித்து விட்டார்.

இந்நிலையில் நடிகர் மோகன்லாலை அடுத்தவருடம் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், பிஜேபி சார்பில் போட்டியிட வைக்க கட்சி மேலிடம் முடிவு செய்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகி யுள்ளது. 58 வயதான நடிகர் மோகன்லாலை திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ்வேட்பாளர் சசிதரூருக்கு போட்டியாக களமிறக்க பிஜேபி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுநடந்தால் கேரளாவில் பிஜேபிக்கு அமோக ஆதரவு இருக்கும் என்றே தெரிகிறது.

சமீபத்தில் நடிகர் மோகன்லால், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துபேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply