தமிழகத்தில் எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்காமல் பாஜக தனித்து போட்டியிடும் என்று  பாஜக தேசிய பொறுப்பாளாரன பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல்தொடர்பாக கூட்டணி அமைக்கும் படலம் சூடுபிடித்துள்ள நிலையில், பெரும் பான்மையான கட்சிகள் கூட்டணி விவாதத்தில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பாஜக-வின் தேசிய பொறுப்பாளரான பிரகாஷ் ஜவடேகர் நேற்று டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார்.

அப்போது, ‘இந்த சட்டமன்றதேர்தலில் திமுக மற்றும் அதிமுக கட்சிகளுடன் நிச்சயமாக பாஜக கூட்டணி அமைத்து கொள்ளாது.

இம்முறை தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் பாஜக தனித்துபோட்டியிட முடிவு செய்துள்ளதாக’ தெரிவித்துள்ளார்.

மேலும் பாஜக-வில் போட்டியிட இதுவரை 3 ஆயிரம்பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர். இவர்களிடம் நேர்காணலும் நடத்தப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பா ளர்களின் பட்டியலை 19(இன்று) மற்றும் 20ம் தேதிகளில் நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும் என பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply