டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அமைக்கப் பட்டுள்ள நவீன நூலகத்தை கட்சித்தலைவர் அமித்ஷா நேற்று தொடங்கி வைத்தார். இந்நூலகத்தில் சுமார் 2 ஆயிரம் புத்தகங்களும், 100 வார மற்றும் மாத இதழ்களும் இடம் பெற்றிருக்கின்றன. ஜனசங் மற்றும் பா.ஜ.க. குறித்த கட்சியின் வெளியீடுகள், இந்த அமைப்புகள் குறித்த புத்தகங்கள், பிரதமர் நரேந்திரமோடி குறித்த புத்தகங்கள் மற்றும் சமுதாய அரசியல்சார்ந்த பல்வேறு நூல்கள் இடம்பெற்றுள்ளன.

இதுமட்டுமின்றி, இணை யத்தின் மூலம் நூல்களை படிக்கவும் (டிஜிட்டல் லைப்ரரி) ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இப்போது 200 நூல்கள் இணைய வழி நூலகத்தில் இருந்தாலும், விரைவில் நூலகத்தில் உள்ள நூல்கள் அனைத்தையும் டிஜிட்டல் முறைக்கு மாற்ற ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, இத்தகைய நூலகங்களை பாஜக.வின் மாநில தலைமை அலுவலகங்களிலும், பின்னர், மாவட்ட அலுவலகங்களிலும் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.

நூலகத்தை பார்வையிட்ட அமித்ஷா சுவரில் ஒரு திருக் குறள் தென்பட்டதும் சிறிது நேரம் ஆச்சரியமாக அதை பார்த்தார். ‘கற்க, கசடற, கற்பவை; கற்றபின் நிற்க, அதற்குத் தக’ என்ற குறளின் ஆங்கில மொழி யாக்கம் தான் அது. அமித்ஷாவிற்கு, நூலகத்தை வடிவமைத்த துறையின் உறுப்பினர் ஆசீர்வாதம் ஆச்சாரி, குறளின் தமிழ்வடிவையும், விளக்கத்தையும் கூறினார். திருக்குறள் பாஜக.வின் தலைமை அலுவலகத்தில் இடம் பெற்றுள்ளதைக்கண்டு மகிழ்ந்த அமித்ஷா துறையின் உறுப்பினர்களுக்கு வாழ்த்துதெரிவித்தார்

Leave a Reply