தமிழக பாஜக தலைவரை தேர்வு செய்வதில் எந்த இழுபறியும் இல்லை. கட்சியின் தேசிய தலைமை நியமிக்கும் தலைவரை கட்சித் தொண்டர்கள் அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது நாட்டின் பொருளாதாரவளர்ச்சி விகிதம் 5 சதவீதமாக இருந்தது. அப்போது அவர், பொருளாதாரம் நல்ல நிலைமையில் தான் உள்ளது என்றார்.

காங்கிரஸின் ஊழல்களை மறைப்பதற்காக பொருளாதாரவீழ்ச்சி என்று தற்போது பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. உலகில் அதிகவளர்ச்சி உள்ள 5 நாடுகளில் சீனாவை இரண்டாவது இடத்துக்குத்தள்ளி, இந்தியா முதலிடத்தில் உள்ளது. விரைவில் மின்சாரவாகனங்கள் வரும் என்பதால் அதை வாங்குவதற் காகவே மக்கள் தற்போது பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்குவதில்லை. மேலும் ஆட்டோமொபைல்துறை வீழ்ச்சி அடைவது சாதாரணமானதுதான் என்று அந்த துறையைச் சேர்ந்தவர்களே கூறுகின்றனர்.

ப.சிதம்பரத்துக்கு ஏற்பட்டுள்ள நிலைமை, சோனியா காந்தி, ராகுல்காந்தி, ராபர்ட் வதோரா ஆகியோருக்கும் வரும். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் பாஜகவில் இணைந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் தூத்துக்குடி, சிவகங்கை, நீலகிரி, மத்திய சென்னை மக்களவைத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல்வரும் .

பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா

Comments are closed.