மதுரைவிமான நிலையத்தில் பாஜக தலைவர் தமிழிசை செளந்தர ராஜன் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு வியாழக் கிழமை ராக்கிகயிறு கட்டினார்.

மதுரை, சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் பாமக சார்பில் நடைபெற்ற பல்வேறுநிகழ்ச்சிகளில் பங்கேற்ற அக்கட்சியின் இளைஞரணித்தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வியாழக் கிழமை மாலை வந்தார்.

பாஜக சார்பில் விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் சதானந்த கவுடாவுடன் சென்னை செல்ல அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மதுரை விமான நிலையத்திற்குவந்தார்.

அப்போது காத்திருப்போர் அறையில் இருந்த அன்புமணி ராமதாஸை சந்தித்து தமிழிசை செளந்தர ராஜன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். பின்பு அவர் சகோதரத்துவத்தை உணர்த்தும் விதமாக அன்புமணி ராமதாஸுக்கு ராக்கிகயிறு கட்டினார். இதையடுத்து, அவர்கள் மாலை 5.30 மணிக்கு ஒரே விமானத்தில் சென்னை சென்றனர்.

Leave a Reply