தமிழகம், கேரளம் உள்பட 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜக தேசிய செயற் குழுக் கூட்டம் தில்லியில் இன்று தொடங்கி 2 நாள்களுக்கு நடைபெற உள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அமித்ஷா கூட்டத்தை தொடக்கிவைத்து பேசுகிறார். பிரதமர் நரேந்திரமோடி நிறைவுரை நிகழ்த்துகிறார்.

இந்தக் கூட்டத்தில், ஏப்ரல், மே மாதங்களில் 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரசாரங்களை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கபட உள்ளது.

Leave a Reply