நாகை பாஜக நிர்வாகி மற்றும் கோவை அம்மன் கோயிலில் பெட்ரோல்குண்டு வீசப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தீவிரவாதிகள் சதியாகஇருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர். நாகை மாவட்டம் பொறையாறு அடுத்த ஒழுகை மங்கலத்தை சேர்ந்தவர் பாலாஜி குருக்கள்(45). திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் குருக்களாக பணியாற்றி வருகிறார். செம்பனார் கோவில் ஒன்றிய பாரதிய ஜனதா தலைவராகவும் பதவிவகித்து வருகிறார்.

நேற்று இரவு இவரது வீட்டில் அனைவரும் தூங்கிகொண்டிருந்தனர். நள்ளிரவு இவரது வீட்டில் மர்ம ஆசாமிகள் பாட்டில் குண்டுவீசினர். பீர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி திரி போட்டு பற்ற வைத்து வீசியுள்ளனர். வீட்டு வாசலில் உள்ள மர கேட் மீது பாட்டில் குண்டு விழுந்து தீப்பிடித்தது. வீட்டின்முன்புறம் உள்ள கீற்று கொட்டகைக்கும் தீ பரவியது. இதில் கேட்டும், கீற்று கொட்டகையும் லேசாக எரிந்துசேதமடைந்தது. இன்று காலை வீட்டில் பாட்டில் குண்டு வீசி இருப்பதை அறிந்து திடுக்கிட்ட பாலாஜி குருக்கள் பொறையாறு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதனை தொடர்ந்து போலீசார் வந்து சம்பவஇ்டத்தை பார்வையிட்டனர்.

சில நாட்களுக்கு முன் மும்பையில் நடந்த குற்ற சம்பவத்தின்போது போலீசார்வசம் செல்போன் சிம் கார்டு சிக்கியது. அதில் இருந்த முகவரியை ஆய்வு செய்தபோது பொறையாறைச் சேர்ந்த ஒருவரதுபெயரில் இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து மும்பை போலீசார் முத்துப்பேட்டை வந்து முகாமிட்டனர். அங்கு இருந்து பொறையாறு வந்து குறிப்பிட்ட முகவரியில் விசாரித்தனர். அப்போது அது போலிமுகவரி என தெரிய வந்ததையடுத்து ஏமாற்றத்துடன் திரும்பிசென்றனர். இந்நிலையில் தற்போது பாலாஜி குருக்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. எனவே இது தீவிரவாதிகள் கைவரிசையாக இருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவம் பொறையாறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதேபோன்று கோவை மலுமிச்சம்பட்டி பழனிசாமி நகரில் நாகசக்தி அம்மன்கோயில் உள்ளது. இக்கோயில் மடாதிபதி சிவசண்முக சுந்தர பாபுஜி சுவாமி மலுமிச்சம்பட்டி தியானபீடத்தில் தங்கி உள்ளார். நாகசக்தி அம்மன் கோயில் அருகிலேயே கோயிலுக்கு சொந்தமான 2 வீடுகள் கட்டப்பட்டுள்ளது.

இதில் ஒருவீட்டில் கோயில் நிர்வாகி கணேஷ் குமார் அவர் மனைவி உமாமகேசு வரியும் மற்றொரு வீட்டில் பானுமதி அவரது மகள் துர்காவும் வசிக்கின்றனர். இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் மர்ப நர்கள் நாகசக்தி அம்மன் கோயில் முன் பெட்ரோல்குண்டு வீசினர். அடுத்து கணேஷ்குமார், பானுமதி வீட்டு வாசலில் உள்ள மிதியடியில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துதப்பினர்.

தீ எரிந்தது மற்றும் பெட்ரோல்வாசம் அறிந்து வெளியில்வந்த கணேஷ்குமார் உடனடியாக தீயை அணைத்து பானுமதி குடும்பத்தினரை எழுப்பி அவர்களிடம் தகவலை தெரிவித்தார். வீட்டுவாசல் முன் பெட்ரோல் கொட்டிக் கிடந்தது. இது குறித்து, மடாதிபதி சிவசண்முகசுந்தர பாபுஜிசுவாமி அளித்த புகாரின் பேரில் செட்டிபாளையம் போலீசார் சம்பவஇடம் சென்று விசாரித்தனர். மேலும் வழக்குப் பதிந்து,  பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இது தீவிரவாதிகளின் கைவரிசையா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

Tags:

Leave a Reply