கர்நாடகாவில் நம்பிக்கைவாக்கெடுப்பு நடப்பதற்கு முதல்நாள் எம்எல்ஏ.,க்களிடம் பாஜக பேரம்பேசியதாக காங்கிரஸ் வெளியிட்ட ஆடியோ டேப்கள் போலியானது என காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ ஷிவராம் ஹெப்பர் கூறியுள்ளது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி யுள்ளது.

கர்நாடகத் தேர்தலில் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, 104 இடங்கள் பெற்று தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்து எடியூரப் பாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் வாஜுபாய் வாலா.

இதை எதிர்த்து காங்கிரஸ்,மதச்சார்பற்ற ஜனதாதளம்கட்சி சார்பில் தாக்கல்செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், எடியூரப்பாவை பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிட்டது.

எடியூரப்பா தனது பெரும்பான்மையை சட்டப் பேரவையில் நிரூபிக்க 7 எம்எல்ஏக்கள் தேவைப்பட்டனர். இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் கோடிக்கணக்கில் பணமும், அமைச்சர் பதவியும் தருவதாக பாஜக தலைவர்கள் பேரம் பேசியதாக காங்கிரஸ் கட்சி 3 ஆடியோடேப்களை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முதல்நாள் வெளியிட்டது.

அதில் குறிப்பாக காங்கிரஸ் எம்எல்ஏ ஷிவராம் ஹெப்பரின் மனைவியை தொலை பேசியில் தொடர்புகொண்ட எடியூரப்பா மகன் விஜேயந்திரா, அவருக்கு நெருக்கமான புட்டுசாமி ஆகியோர் பேரம் பேசியதாக பொய் தகவல்கள் பரப்பப்பட்டன.

இந்த ஆடியோ நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முதல்நாள் வெளியிடப்பட்டதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ ஷிவராம் ஹெப்பர் இன்று தனது பேஸ்புக்கில் வெளியிட்டபதிவில், காங்கிகரஸ் கட்சி தன்னைபற்றி வெளியிட்ட ஆடியோ டேப் போலியானது என தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப் பதாவது :

தன்னையும், தனது மனைவியையும் பாஜக.,வினர் யாரும் தொடர்பு கொள்ள வில்லை. என் மனைவியை தொடர்புகொண்டு தொலை பேசியில் பாஜகவினர் பேசியதாக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட ஆடியோடேப் போலியானது.

அதுபோன்ற எந்த விதமான தொலைபேசி அழைப்புகளையும் என் மனைவி எதிர்கொள்ள வில்லை. அந்த ஆடியோ டேப்பில் உள்ள பெண்ணின் குரலும் என் மனைவி உடையது அல்ல. இது போன்ற ஆடியோ டேப்பை நான் கண்டிக்கிறேன். இவ்வாறு அதில் அவர் குறிப்பிட் டுள்ளார்.

Leave a Reply