பாஜக மகளிரணியின் தேசியதலைவராக வானதி சீனிவாசனை சமீபத்தில் அக்கட்சியின் தேசியதலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தேசியளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது தமிழக பாஜகவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில் பாஜக மகளிரணியின் தேசியதலைவராக வானதி சீனிவாசன் பொறுப்பேற்றுக்கொண்டார். பாஜக மூத்த தலைவர்கள் இந்தநிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதிசீனிவாசன், தமிழகத்தில் ஆட்சியில் அமரவேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம் என்றார்.

பாஜக வகுக்கும் வியூகங்களை வெளியேசொல்ல முடியாது என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார். கூட்டணி கட்சிகளிடையே மாற்றுக் கருத்துக்கள் இருப்பதில் தவறு ஒன்றும் இல்லை என்றும் வானதிசீனிவாசன் குறிப்பிட்டார்.

Comments are closed.