ராமநாத புரத்தைச் சோ்ந்த பாஜக மாநில துணைத்தலைவா் து. குப்புராமுக்கு, தேசிய கனிம வள இயக்குநா் பொறுப்பு மத்திய அரசால் வழங்கப் பட்டுள்ளது.

ராமநாதபுரத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் து. குப்புராமு (62), பாஜக மாநில துணைத்தலைவராக உள்ளாா். இவா், கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு, கணிசமான வாக்குகளை பெற்றிருந்தாா். மிகவும் எளிமையான மனிதர். ராமர் பாலம் சேதமடையாமல் இருக்க போராடி பல வெற்றிகளை கண்டவர்.

மேலும்  பாஜக மாநில தலைவா் பொறுப்புக்கு பரிசீலிக்கப்  பட்டவா்களில் து. குப்புராமு பெயரும் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில், அவா் தற்போது தேசிய கனிமவள மேம்பாட்டுத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

Comments are closed.