கோவா மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் கணையப் புற்றுநோயால் மரணமடைந்ததை அடுத்து, அந்த மாநிலத்துக்கு புதிய முதலமைச்சரைத் தேர்வுசெய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கிடையே நடந்த ஆலோசனைக்கு பிறகு, பாஜக கட்சியைச் சேர்ந்த பிரமோத் சாவந்த் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அவருடன் கோவா பார்வர்டு கட்சியின் விஜய் சர்தேசாய், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் சுதின் தவாலிங் ஆகியோர் துணை முதலமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

இதனிடையே நேற்றிரவு முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பிரமோத் சாவந்த், பாஜக கட்சி தனக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுத்துள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply