நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குஎண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க. தனிப் பெரும்பான்மையாக 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது. தனித்துநின்ற பா.ஜனதாவும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளை கணிசமான எண்ணிக்கையில் கைப்பற்றியுள்ளது.

அதன்படி, மாநகராட்சியில் 22 வார்டுகளை பாஜக கைப்பற்றிஉள்ளது. தொடர்ந்து, நகராட்சியில் 56 வார்டுகளிலும், பேரூராட்சியில் 230 வார்டுகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பாஜக மீது நம்பிக்கைவைத்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி. பாஜகவை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டனர். பாஜகவை முழுமையாக ஏற்று எங்களுடன் பயணிக்க மக்கள் தயாராகிவிட்டனர். கடின உழைப்பால் நகர்ப்புறதேர்தலில் வெற்றிபெற்று 3-வது இடத்திற்கு வந்துள்ளோம்.

மக்கள் நலனுக்காக அரசு கொண்டுவரும் அனைத்து திட்டங்களுக்கும் பாஜக உறுதுணையாக இருக்கும். பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள் கவலையடைய வேண்டாம். தொடர்ந்துபயணிப்போம்.

பாஜகவின் வலிமையை உணர்த்துவதற்காகவே நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் தனித்துப் போட்டியிட்டோம். அதிமுகவுடனான தேசியகூட்டணி தொடரும். பாஜக வலிமைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒருதேர்தலில் அதிமுக பின்தங்கிவிட்டதால் குறைத்து மதிப்பிடக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.