தமிழகம், புதுச்சேரியை போல் கேரளாவிலும் மே 16–ந்தேதி ஒரேகட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தலைநகர் திருவனந்தபுரத்தில் கழக்கூட்டம் என்ற இடத்தில் பா.ஜ.க தொண்டர்கள் பேரணி நடத்தினர். அப்போது அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு குண்டர்கள் தாக்குதல்  நடத்தியுள்ளனர். கற்களை வீசி தாக்கியுள்ளனர்.

இதில் பாஜக. முன்னாள் மாநில தலைவர் வி.முரளிதரன் மற்றும் போலீசார் உள்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த பகுதியில் இருந்த சிலகடைகளும் போலீஸ் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்த சம்பவத்தை கண்டித்து  பா.ஜ.க. சார்பில்  முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பாப்பினச்சேரியில் அண்மையில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவரை மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்கள் அடித்துக் கொன்றது நினைவுக்கூரத்தக்கது.

Tags:

Leave a Reply