பாஜக மூத்த தலைவர் எல்கே.அத்வானி சனிக் கிழமை கோவை வந்தார்.கோவை அருகே உள்ள ஈஷாயோக மையத்தில் 112 அடி உயரம்கொண்ட ஆதியோகி சிவன் சிலை திறப்பு விழா வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திரமோடி, தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர்பங்கேற்றனர்.


இந்நிலையில், ஈஷாயோக மையத்தில் 2 நாள் தங்குவதற்காக அத்வானி விமானம் மூலம் சனிக் கிழமை மாலை 5 மணி அளவில் கோவைவந்தார். அங்கு அவரை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தேசியச்செயலர் ஹெச்.ராஜா, மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதன் பின்னர், அவர் கார்மூலம் பலத்த பாதுகாப்புடன் ஈஷாயோக மையம் சென்றடைந்தார். அத்வானியுடன், அவரது மகள் பிரதீபா, குடும்பமருத்துவர், நண்பர், பாதுகாவலர் உள்ளிட்ட 5 பேர் கோவை வந்தனர். அத்வானியின் வருகையை ஒட்டி, அவிநாசி சாலை, திருச்சிசாலை, பேரூர் சாலை, ஆலாந்துறை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் காவல் துறையினர் சனிக் கிழமை காலை முதலே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.
அவர் கோவையிலிருந்து திங்கள்கிழமை மாலை புது தில்லி செல்ல உள்ளார்.

Leave a Reply