மகாரஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியாமல் போனது பாஜக.,வுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வியாகவும், அமித் ஷாவின் ராஜ தந்திரத்துக்கு ஏற்பட்ட  வீழ்ச்சியாகவும் காட்ட முயற்சிக்கும் எதிர்க்கட்சிகளின், பொது ஊடகங்களின் செயல், முதிர்ச்சியற்ற ஒன்றே!

மக்கள் வாக்களித்தது, பெரும்பான்மையை தந்தது பாஜக, சிவசேனா கூட்டணிக்கே. 288 தொகுதிகளில் பாஜக.,வுக்கு  105, சிவசேனாவுக்கு  56 என்று மொத்தம் 161 தொகுதிகளில் வெற்றிவாய்ப்பை அள்ளித்தந்து, இது ஊழலற்ற நேர்மையான அரசுக்கு கிடைத்த , தேவேந்திர பட்னாவிஷின்  தலைமைக்கு கிடைத்த அங்கீகாரம்.  இங்கே பாஜக தேர்தல் ஜனநாயத்தில் மக்கள் மன்றத்தினால் தோற்கடிக்கப்பட வில்லையே .

அதே நேரத்தில்  தேர்தலுக்கு பின்பு பாஜக கொடுத்திடாத வாக்குறுதியை, கொடுத்ததாக பொய்யுரைத்த!, பாஜக.,வில் பாதி தொகுதியை கூட வென்றிடாத!!, சிவ சேனாவின் முதல்வர்  ஆசைக்கு  இணங்கி இருந்தால்,  பாஜக கூட்டணி இன்று ஆட்சியை அமைத்திருக்கும், அந்த விதத்த்தில் இது பாஜக.,வுக்கு தோல்விதான்.

மேலும் தன்னை ‘ஹிந்து இதயத்தின் சக்ரவா்த்தி’ (ஹிந்து ஹ்ருதய் சாம்ராட்) என்று வா்ணித்துக் கொண்ட!, நேரு குடும்பத்தை, குறிப்பாக சோனியாவை கடுமையாக எதிர்த்த!, பால் தாக்கரேயின் சிவ சேனா இதுவல்ல, பதவிக்காக சோனியாவின் வீட்டு கதவை கூட தட்ட தயங்காத, தட்டியே விட்ட அவரது மைந்தனின் சிவ சேனா இது.

இந்தியாவில் பாகிஸ்தானை எந்த ரூபத்திலும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறிக்கொண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை  இந்திய மண்ணில் விளையாட எதிர்த்த!, அப்படியும் விளையாட  வந்தால் மைதானங்களை சேதப்படுத்துவோம் என்று கூறி சேதப்படுத்திய  அன்றையகால  சிவ சேனா இதுவல்ல , பாகிஸ்தான் புகழ் பாடும் சரத் பவார் போன்றோருடன், முதல்வர் பதவிக்காக கைக்கோர்து, அப்படியே பாகிஸ்தான் புகழ் பாட வேண்டும் என்றல் கூட பாடத்  தயங்காத  உத்தவ் தாக்ரேயின் இன்றைய சிவ சேனா இது!, இதை  நன்கு அறிந்திருந்தும், தெரிந்திருந்தும், பால் தாக்ரேயின் மீது கொண்ட மதிப்பால், 30 வருட கூட்டணியை சகிப்புடன் தொடர்ந்த  பாஜக.,வின் தர்மத்துக்கு கிடைத்த தோல்விதான்  இது.

இதைப்போன்ற துரோக தோல்விகள் தவிர்க்க இயலாதவையே , அரசியலில் இது புதிதும் அல்ல, ஆண்டாண்டு காலமாக வரலாற்றில் ஆங்காங்கே காணக் கூடியதே, இன்று இது சிவ சேனாவின் துரோகத்தால் நிகழ்ந்துள்ளது.  பாஜக.,வின் பலவீனத்தால் நிகழவில்லையே, எனவேதான் கூறுகிறோம் எதிர் கட்சிகளின், ஊடகங்களின் விமர்சனத்தை முதிர்ச்சியற்ற ஒன்று என்று.

நன்றி தமிழ் தாமரை வெங்கடேஷ் 

Comments are closed.