ஆசாம் மாநில சட்டமன்ற தேர்தல் .பாஜக.,விற்கு ஆதரவாக ராஷ்ட்ரிய முஸ்லிம்மாஞ் மற்றும் ஜமாத் உலீமா இ ஹிந்த் ஆகியவை பிரசாரத்தை துவக்கின

அசாம் மாநிலத்தில் வரும் மே மாதம் சட்டமன்றதேர்தல் நடைபெற இருக்கிறது ..தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது

பிரதமர் மோடி சமீபத்தில் அசாம் மாநிலத்தில் தேர்தல்பிரசாரத்தை துவக்கினார்.தற்போது பிரசாரம் சூடு பிடித்துள்ளது .

சமீபத்தில் துப்ரி மற்றும் நாகன் மாவட்டங்களில் ராஷ்ட்ரிய முஸ்லிம் மாஞ் பாஜக.,விற்கு ஆதரவாக பொதுக் கூட்டம் நடத்தியது,ஏராளமானவர் கலந்து கொண்டனர்

இதுகுறித்து பேசிய அஸ்ஸாம் மாநில ராஷ்ட்ரிய முஸ்லிம் மாஞ் தலைவர் முஹம்மத் நஜ்முல் அலாம் லஷ்கர் கூறுகையில் காங்கிரஸ் கட்சி இஸ்லாமியர்களை வாக்குவங்கியாக மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளது ..வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அகற்றப்படவேண்டும் என்றும் பாஜகவிற்கு ஆதராவாக தீவிர பிரசாரம் செய்யபோவதாகவும் கூறினார் .

முன்னதாக நடத்த ஜம்மு காஷ்மீர் சட்ட மன்ற தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக ராஷ்ட்ரிய முஸ்லிம் மாஞ் மற்றும் ஜமாத் உலீமா இஹிந்த் ஆகியவை பாஜகவிற்கு ஆதரவாக தீவிரபிரசாரம் செய்து பாஜகவை வெல்ல வைத்தது.பீகார் தேர்தலில் ஒவைசிகட்சி போட்டியிட்ட தொகுதிகளில் மட்டும் ராஷ்ட்ரிய முஸ்லிம் மாஞ் தீவிர பிராசாரத்தில் ஈடுபட்டு ஒவைசி கட்சியை வீழ்த்தியது

Leave a Reply