5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் பாஜக.,விற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

அசாம்மாநில பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு டுவிட்டரில் கூறியுள்ள வாழ்த்துசெய்தி, ‘அசாம் பாஜகவின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தவெற்றி அனைத்து நிலைகளுக்கு மானது! அற்புதமானது!’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இத்துடன் அசாம் பாஜக.,வின் முதல்வர் வேட்பாளரான சர்பாணந்தா சோன்வாலிடம் தொலை பேசியில் வாழ்த்து தெரிவித்தார் மோடி. இதுகுறித்து தனது டூவிட்டரில் குறிப்பிட்டுள்ள அவர், ’சர்பாணந்தாவிடம் பேசி பிரசாரத்தில் செய்த கடின உழைப்பில் கிடைத்த கட்சியின் வெற்றிக்கு வாழ்த்துதெரிவித்தேன்.’ எனக் கூறியுள்ளார்.

மேலும், ‘அசாம், மேற்குவங்காளம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில மக்கள் அளித்த ஆதரவிற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். உங்களுக்கு பணிசெய்ய நான் என்றென்றும் உழைப்போம் என உறுதிகூறுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply