தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகம் காத்திருக்கிறது. ‘ஸ்ட்ராங் ரூம்’ எனப்படும் கட்டுப்பாட்டு அறையில் வாக்குஇயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. வரும் மே 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் மத்தியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனிடம் வாக்கு இயந்திரத்தில் கோளாறுநடைபெற வாய்ப்புள்ளதா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்தவர், ”மின்னணு வாக்கு இயந்திரத்தில் கோளாறு என கூறுபவர்களுக்குத்தான் கோளாறு உள்ளது. இதுவே காங்கிரஸ்வென்றால் இயந்திரத்தில் கோளாறு இல்லை என்பார்கள். பாஜக வென்றால் கோளாறு என்பார்கள்” என்றார்.

நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக சார்பில் கன்னியாகுமரி நாடாளுமன்றத்தொகுதி வேட்பாளராக பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.