மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி பிரகாஷ்ஜவடேகர் நாடாளுமன்ற மாநிலங்களவை தொலைக் காட்சிக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:-

மத்திய பள்ளிக் கல்வி திட்டத்தில் தற்போது பாடச்சுமை மிகவும் கடுமையாக உள்ளது. பி.ஏ. மற்றும் பி.காம் பட்டப்படிப்புகளை விட மிக அதிகமாக காணப்படுகிறது. மாணவர்கள் அனைத்து துறைகளிலும் தங்களது திறனை வெளிப்படுத்து வதற்கு நேரம் தேவை என்பதால் இந்தபாடச்சுமை குறைக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

மேலும் மாணவர்களின் அறிவாற்றல் திறனை மேம்படுத்த வேண்டும் என்றால் நிச்சயம் அவர்களுக்கு கல்வியில் முழுமையான சுதந்திரம் தேவை. எனவே தேசியகல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலிடம் மத்திய பள்ளிக் கல்வி திட்டத்தின் பாடச்சுமையை பாதியாக குறைக்கும்படி கேட்டுக்கொண்டு இருக்கிறேன். 2019-ம் கல்வி ஆண்டு முதல் இது நடைமுறைக்குவரும்.

மத்திய பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளவும், அதை வருகிற பட்ஜெட் கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு மாணவர் மார்ச் மாததேர்வில் தோல்வி கண்டால் அவருக்கு மே மாதம் தேர்வு எழுத இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:

Leave a Reply