வெள்ளம்பாதித்த பகுதிகளில் தனியார் மருத்துவ மனைகளில் ஒருமாதத்துக்கு தனிப் பிரிவுகளை அமைக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் செவ்வாய்க் கிழமை வெளியிட்ட அறிக்கை:

 மழைவெள்ளத்தில் இருந்து சென்னை மெதுவாக மீண்டுவருகிறது. அரசுடன் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் பெருமளவு பங்கெடுத்துக கொண்டன.  நிதியாக கொடுப்பவர்கள் பொதுநிவாரண நிதியாக அளித்து விடுகின்றனர்.

 அதேசமயம், ஏதாவது மக்கள் நலத்திட்டங்கள் செய்ய நினைத்தாலோ அதற்கு ஒருவழிகாட்டுதல் இருந்தால் நலமாக இருக்கும். அதிகம்பாதித்த சென்னையின் புறநகர்ப் பகுதிகள், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்ட இடங்களாகவே விளங்குகின்றன. அத்தனை தனியார் மருத்துவ மனைகளும் வெள்ளம் பாதித்த மக்களுக்கான தனிப்பிரிவுகளை ஒரு மாதத்துக்கு அமைக்க வேண்டும்.

 வீட்டு உபயோக பொருள்களை இழந்தவர்களுக்கு, அந்த பொருள்களை லாபம் இல்லாமல் கொடுக்க முயல்வதோடு, தங்கள் நிறுவனங்கள் தயாரித்த பொருள்களை திரும்ப பெற்று குறிப்பிட்ட குறைந்த விலையில் புதுப் பொருள்களை வழங்கலாம். பாதிக்கப்பட்டோர் எல்லா வகையிலும் மீண்டு வருவதற்கு அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழிசை கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply