மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்றதற்கு பின்னர் பாதுகாப்பு தளவாடகொள்முதலில் வெளிப்படைத் தன்மை உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் 2 ஆண்டு சாதனைகள் விளக்கக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கலந்து கொண்டு, மத்திய அரசின் சாதனைகளை விளக்கிக் கூறினார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், தேசியசெயற்குழு உறுப்பினர் இல. கணேசன், தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ஆகியோர் பங்கேற்ற இக் கூட்டத்தில், நியூஸ்டுடே மற்றும் மாலைச்சுடர் நிர்வாக இயக்குநர் டி.ஆர்.ஜவஹர், விஐடிபல்கலைக் கழக வேந்தர் ஜி.விசுவநாதன், உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று மத்திய அர சின் திட்டங்கள் குறித்த சந்தேகங்களை கேள்விகளாக எழுப்பியும், மத்தியஅரசின் திட்டங்கள் குறித்த தங்கள் கருத்துக்களையும் பதிவுசெய்தனர்.


அப்போது, நியூஸ் டுடே மற்றும் மாலைச்சுடர் நிர்வாக இயக்குநர் டி.ஆர்.ஜவஹர், இந்திய மற்றும் உலகளவில்  பாதுகாப்பு வர்த்தகபேரத்தில் இடைத்தரகர்கள் தலையீட்டினை தேசியஜனநாயக கூட்டணி அரசு எவ்வாறு எதிர்கொண்டது என்பதுபற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்துப்பேசிய மனோகர் பாரிக்கர், நாங்கள் பொறுப்பேற்று கொண்டபின்னர், பாதுகாப்பு வர்த்தகபேரத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தினோம். மேலும், உயர்பதவியில் உள்ளவர்கள் தூய்மையானவர்களாக இருப்பதன் மூலம் பாதுகாப்பு வர்த்தகபேரத்தில் ஊழலை தவிர்க்கமுடியும் அதுதான் தற்போது நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.


இந்த விழாவில் பேசிய விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன், மத்தியரசின் வருவாயை உயர்த்த வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை உயர்த்து வதற்கான வழிவகை குறித்து கேட்டார். அதற்கு பதில் அளித்த அமைச்சர், பெரும்பாலானவர்கள் மறைமுக வரிகளான சுங்கவரி, விற்பனைவரி, மதிப்பு கூட்டு வரி  செலுத்தும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற பின்னர் அவர் மேற்கொண்ட உலகளாவிய பல்வேறு சுற்றுப்பயணங்களின் மூலம் இந்தியா குறித்தமதிப்பீடு உலகளவில் உயர்ந்துள்ளதாகவும், இந்தியா குறித்த பல்வேறு நாடுகளின் பார்வை மாறியுள்ள தாகவும் அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply