சென்னை திருவிடந்தையில் ராணுவகண்காட்சி துவக்க விழாவில், மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராம் பேசினார்.

அப்போது அவர், பாதுகாப்பு துறையின் உற்பத்தி என்பது மேன்இன் இந்தியா திட்டத்தின் இதயம். தமிழகம் தேவையான உள்கட்டமைப்பு, மனிதவளத்தை கொண்டுள்ளது. இந்தியாவில் முதலீடு செய்யுமாறு செங்கோட்டையில் சுதந்திர தின உரையின்போது மோடி அழைப்பு விடுத்தார். மேக்இன் இந்தியா திட்டத்தின் கீழ் ராணுவ தளவாட உற்பத்தியை அதிகரிக்க அழைக்கிறேன் . ராணுவத் தளவாடங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிசெய்யும் அளவுக்கு முன்னேறியுள்ளோம்.

இந்த ராணுவ கண்காட்சியில் இடம் பெற்றுள்ள 50 சதவீதம் தடவாடங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டவை. இவற்றில் பெரும்பாலானவை சிறு மற்றும் நடுத்தர தொழிற் சாலைகளில் உற்பத்தி செய்யப் பட்டவை என்றார்

Leave a Reply