கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவளாகத்தில் ரூ. 15 கோடி செலவில் அமைக்கப் பட்டுள்ள பாரதமாதா கோயில், ராமாயண கண்காட்சிகூடம் ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி நேற்றுமாலை டெல்லியில் இருந்து  வீடியோ கான்பிரன்சிங் மூலம் திறந்துவைத்தார். 

விழாவில்  பிரதமர் மோடி , அனைவருக்கும் பொங்கல்வாழ்த்து என தமிழில் வாழ்த்து தெரிவித்தார். விவேகானந்தர் பிறந்ததினத்தில் கேந்திராவில் இந்த விழாநடப்பது மிகவும் பொருத்தமானது ஆகும். கன்னியா குமரி மாவட்டத்துக்கு  நான் விரைவில் வருகை தருவேன் என்றும் அவர் கூறினார்.

இதற்கான விழா கேந்திர வளாகத்தில் கடற்கரைபகுதியில் நடந்தது. வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் பேசியது பெரியதிரைகள் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.  விழாவில் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் பேசுகையில், கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவுமண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு இடையே பாலம் அமைக்கப்படும். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீரை இணைக்கும் வகையில் சிறப்புரயில் இயக்கப்படவுள்ளது என தெரிவித்தார்.

Leave a Reply