""பாரத் மாதா கீ ஜே கோஷத்தை முழங்காதவர்கள், நாட்டைவிட்டு வெளியேறலாம்'' என்று பாஜக பொதுச்செயலர் கைலாஷ் விஜய்வர்கீயா கூறினார்.


 இதுகுறித்து அவர், கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க் கிழமை கூறுகையில், ""பாரத் மாதா கீ ஜே' கோஷத்தை எழுப்ப விரும்பாத வர்களுக்கு, இந்த நாட்டில் வசிக்க உரிமையில்லை என்று நான் கருதுகிறேன். அவர்கள் ஏதாவது வேறு ஒருநாட்டுக்கு செல்லட்டும்'' என்றார்.


 முன்னதாக, "பாரத் மாதா கீ ஜே' கோஷத்தை முழங்கவேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கூறியிருந்தார்.

அதற்குப் பதிலடியாக, ""எனது கழுத்தில் கத்தியைவைத்து மிரட்டினாலும், "பாரத் மாதா கீ ஜே' முழங்க மாட்டேன் என்று அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸ் கட்சித்தலைவர் அஸாதுதீன் ஒவைஸி திங்கள்கிழமை கூறியிருந்தார்.

Leave a Reply