டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்திற்குள் கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13-ம்தேதி ஆயுதங்களுடன் புகுந்த 5 தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் 5 டெல்லிபோலீசார், ரிசர்வ் படையின் பெண் அதிகாரி, பாராளுமன்ற காவலர்கள் 2 பேர், தோட்டக்காரர் என மொத்தம் 9பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்சம்பவத்தின் 15-ம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைப் பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, இறந்தவர்களின் உருவப் படங்கள் பாராளுமன்ற வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப் பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, மத்தியமந்திரிகள் ராஜ்நாத்சிங், அருண்ஜெட்லி, வெங்கையா நாயுடு,

காங்கிரஸ் தலைவர்கள் குலாம்நபி ஆசாத், ஆனந்த்சர்மா, பாஜக எம்பி சத்யநரைன் ஜாட்டியா, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட பல்வேறு எம்.பி.க்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

பாராளுமன்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Leave a Reply