பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவித்து உள்ளன. 
 
மூன்று வாரங்களுக்கு முன்னதாகவே பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கப்படலாம் என தெரியவந்து உள்ளது. இன்று காலை பாராளுமன்றம் விவகாரம்தொடர்பான மத்திய அமைச்சரவை கமிட்டி இம்முடிவை எடுத்து உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
 
இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி அமலில் இருந்த போது ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரிமாத கடைசி வேலைநாள் காலையில் ஆங்கிலேயே அரசு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல்செய்யும். அதே நாள் மாலை 5 மணிக்கு இந்திய அரசுசார்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த நடைமுறை சுதந்திரத்துக்கு பின்னும் கடந்த 2000–ம் ஆண்டுவரை தொடர்ந்து நடைபெற்றது.பின்னர் 2001–ம் ஆண்டில் அப்போதைய பா.ஜனதா கூட்டணி அரசில் நிதிமந்திரியாக இருந்த யஷ்வந்த் சின்ஹா, பிப்ரவரி மாத கடைசி வேலைநாள் காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல்செய்யும் முறையை கொண்டு வந்தார். இந்த முறைதான் தற்போதுவரை பின்பற்றப்பட்டு வருகிறது.
 
இந்தியாவில் ஏப்ரல் முதல் மார்ச்வரை நிதியாண்டாக கடைப்பிடிக்கப் படுகிறது. பிப்ரவரி இறுதியில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட், பாராளுமன்ற நடைமுறைகளை கடந்து மே மாதம் பாதியில்தான் நிறைவேற்றுகிறது. இதனால் 2–3 மாதங்களுக்கான பல்வேறு செலவின ங்களுக்காக தனியாக பாராளுமன்றத்தில் கணக்கு தாக்கல் செய்யப்பட வேண்டி உள்ளது. மேலும் மானியங்கள் மற்றும் ஒதுக்கீட்டுமசோதா, ஆண்டு செலவினம் மற்றும் வரி மாறுதல்கள் தொடர்பான மசோதாக்களும் ஏப்ரல், மே மாதங்களில்தான் நிறைவேற்றப்படுகிறது.
 
இந்த பிரச்சினைகளை களையும் வகையில் நிதியாண்டு தொடங்குவதற்கு முன்னதாக அதாவது மார்ச் 31–ந் தேதிக்கு முன்பே பட்ஜெட்டை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஜனவரிமாத இறுதியில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய நிதி அமைச்சகம் பரிசீலித்தது. இந்த ஆண்டு முதல் ரெயில்வேபட்ஜெட் ரத்து செய்யப்பட்டு, பொதுபட்ஜெட்டிலேயே அதற்கும் நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
 
ரெயில்வே உள்பட ஒருங்கிணைந்த பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி பிப்ரவரி ஒன்றாம் தேதி வெளியிடுவார் என்று தெரிகிறது. அரசின் முக்கியமான பல்வேறு திடங்களுக்கு நிதி ஒதுக்கீடுசெய்ய இந்நகர்வு வழிவகை செய்யும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். முந்தைய ஆண்டுகளில் நிதிஆண்டு தொடக்கத்தில் ஏப்ரல்-1, நிதியானது ஒதுக்கீடுசெய்யப்படாது, எனவே நிதி ஒதுக்கீட்டில் தடை மற்றும் இடையூறு ஏற்படும். அரசின் செயலாளர்கள் குழு பிரச்சனைகளை எதிர்க் கொள்ள பட்ஜெட்டை முன் கூட்டி கொண்டுவர பரிந்துரைசெய்து இருந்தனர்.

Leave a Reply