பார்லிமென்டில் ராகுல் தவறானதகவலை கூறுவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

நாகா அமைதி ஒப்பந்தம்தொடர்பாக, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்த வில்லை. பிரதமர் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தம் குறித்து உள்துறை அமைச்சகத்துக்கு தெரியாது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், பார்லிமென்டில் கூறினார்.

இதற்குபதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நாகா அமைதி ஒப்பந்தம் தொடர்பாக, பிரதமர் மோடியுடன் நான் பலமுறை ஆலோசனை நடத்தியுள்ளேன். பார்லிமென்டை தவறாக வழி நடத்த முயற்சி செய்யும் ராகுலுக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துகொள்கிறேன். அவரது கருத்து முற்றிலும் தவறானது. ஆதாரமற்றது என கூறினார்.

Leave a Reply