பார்லி., கூட்டத்தொடர் நடக்காத, 23 நாட்களை விடுப்புநாட்களாக அறிவித்து, அந்த நாட்களுக்கான சம்பளம் மற்றும் படியை விட்டுத்தருவதாக, பிரதமர், நரேந்திர மோடி அறிவித்ததையடுத்து, அவரதுசம்பளத்தில் இருந்து, 79,752 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது.

கடந்த மார்ச், 5ல் துவங்கிய, மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, எதிர்க் கட்சியினரின் அமளியால், பார்லி.,யின் இரு அவைகளும் செயல் படாமல் முடங்கின.அந்தநாட்களை விடுப்பு நாட்களாக கருதி, மார்ச், 5 – 28 வரையிலான, 23 நாட்களுக்கு, சம்பளம் மற்றும் படியை தே.ஜ., – எம்.பி.,க்கள் பெறப் போவதில்லை, என, மத்திய அமைச்சர், அனந்த்குமார் அறிவித்தார்.

பிரதமர், நரேந்திர மோடியும், 23 நாட்களை விடுப்புநாளாக அறிவித்து, அந்த நாட்களுக்கான சம்பளம் மற்றும் படியை பெறப் போவதில்லை என, அறிவித்தார். இதையடுத்து, அவரது மார்ச் மாதசம்பளத்தில் இருந்து, 79,752 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது.

Leave a Reply