எல்லைக் கட்டுப்பாடு கோட்டில் இருந்து பாகிஸ்தானுக்குள் 80 கி.மீ., துாரத்தில் கைபர் பகுதியில் அமைந்துள்ளது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் மிகப் பெரிய முகாம் செயல் பட்டு வருகிறது.இந்த பயிற்சி முகாமில் இருந்து கொண்டு தான் இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்களை தீவிரவாதிகள் தீட்டியும், செயல் படுத்தியும் வந்தனர்.

பாலகோட். புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்திய படைகள் துல்லிய தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என்ற சந்தேகத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாதிகள், தங்கள் முகாம்களை காலி செய்து விட்டு, பாலகோட் சென்று விட்டனர்.

இந்தியா, தாக்குதல் நடத்தினால் எல்லை ஓரம் தான் நடத்தும் என்று பாகிஸ்தான் எதிர்ப்பார்த்தது. அதனால் பாலகோட்டுக்கு பயங்கரவாதிகளை இடம் மாற்றி விட்டது.

பாலகோட் ஊரில் இருந்து சில கி.மீ., ஒரு மலை உச்சியில் பயங்கரவாதிகள் முகாம் அமைந்துள்ளது. ஐந்து நட்சத்திர ஓட்டல் வசதியில் இம்முகாம் அமைந்திருந்தது. 500 முதல் 700 பயங்கரவாதிகளுக்கு இங்கு பயிற்சி தர முடியும். ஓய்வு பெற்ற பாக்., ராணுவ அதிகாரிகள் தான் அவர்களுக்கு பயிற்சி அளித்தனர். பயங்கரவாதிகளுக்கு மூளைச் சலவை செய்ய சிறப்பு சொற்பொழிவுகளும் நடந்து வந்தன.அருகில் கன்வர் ஆறு ஓடுகிறது. தண்ணீர் வழியாக சென்று தாக்குதல் நடத்துவதற்கும் இங்கு பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமிற்குள் நீச்சல் குளமும் இருந்தது.

 

ஜெய்ஷ் இ முகமதுவின் கமாண்டர் மசூத் அசாரின் சகோதர்ர் முப்தி அப்துல் அமீர்தான் இதன்  பொறுப்பாளராக இருக்கிறார்.

முகாமில் காணப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் நாட்டு கொடிகள் மீது வெறுப்பை தூண்டும் வகையில் தீவிரவாதிகள் சித்தரிப்பு செய்துள்ளனர். பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.-ன் தூண்டுதலின்பேரில் பாலகோட் தீவிரவாத முகாமில் 1000-க்கும் அதிகமான தீவிரவாதிகள் பயிற்சி பெற்று சென்றுள்ளனர்

 

Tags:

Leave a Reply