பாலாற்று தடுப்பணை விவகாரம்குறித்து, தமிழக, ஆந்திர முதல்வர்கள் நேரில் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று பாஜக தேசியசெயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.

இது குறித்து அவர், வேலூர் மாவட்டம், ராணிப் பேட்டையில் செய்தியாளர்களிடம் சனிக் கிழமை கூறியதாவது: மத்திய அரசுவேறு, மாநில அரசு வேறு என்ற நிலைமாறி ஒன்றுபட்டு மக்கள்பணி செய்வோம் என்ற நோக்கில் "தீம் இந்தியா' என்ற தலைப்பில், பிரதமர் நரேந்திரமோடி ஒருதிட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளார். இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் பியூஸ்கோயல், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில்சந்தித்து பேசுகையில்,

தமிழக அரசுக்கு,மத்திய அரசு தொடர்ந்து உதவிசெய்ய தயாராக உள்ளது என்று கூறியுள்ளார். மத்திய அரசின் வேளாண்மை பயிர் பாதுகாப்புத்திட்டத்தை, தமிழக அரசு முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் என்று கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணையை உயர்த்திகட்டும் விவகாரத்தில், இருமாநில முதல்வர்களும் நேரில்சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினால் பிரச்னை தீர்ந்துவிடும் என்றார்.

Leave a Reply