பாலினபாகுபாட்டை முடிவுக்கு கொண்டுவர இந்தியமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். சர்வதேச பெண்குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி விடுத்துள்ள செய்தியில், ''படிப்பு முதல் விளையாட்டு வரை ஒவ்வொரு துறையிலும் பெண்குழந்தைகள் தங்கள் தடங்களை பதித்து வருகின்றனர். சர்வதேச பெண்குழந்தைகள் தினத்தில் இவர்களின் சாதனைகளுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்.

இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடுஇல்லை, அவர்கள் பிரகாசிப்பதற்கு அனைத்து வாய்ப்புகளும் தரப் படுகின்றன என்ற நிலையை நோக்கி நான் அனைவரும் ஒன்று பட்டு பாடுபட வேண்டும்'' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

சர்வதேச பெண்குழந்தைகள் தினம் ஐ.நா.வால் அறிவிக்கப்பட்டு, கடந்த 2012, அக்டோபர் 11 முதல் கடைபிடிக்கப்படுகிறது.

Leave a Reply