டெல்லியில் மின்வெட்டுதொடர்பான புகார் அளிக்க வந்தபெண்ணுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனத்துல்லா கானை போலீஸார் நேற்று கைதுசெய்தனர்.

இதுகுறித்து டெல்லியின் தென்கிழக்கு சரக போலீஸ் இணைஆணையர் ஆர்.பி.உபாத்யாய கூறும்போது, ‘‘கடந்த 22-ம் தேதி மாவட்ட நீதிபதி முன் பெண் ஒருவர் ஆஜராகி வாக்கு மூலம் அளித்தார். அப்போது ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனத்துல்லாவின் வீட்டில் இருந்து திரும்பி கொண்டிருந்த சமயத்தில், ஒருவாகனம் தன்னை மோத முயன்றதாகவும், அதில் அமனத்துல்லா அமர்ந்திருந்த தாகவும் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் சட்டப்பிரிவு 308-ன் கீழ் அமனத் துல்லாவுக்கு எதிராக வழக்கு பதிவுசெய்தோம். இது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவு என்பதால் அமனத்துல்லாவையும் கைது செய்தோம்’’ என்றார்.

தவிர மின்வெட்டு பிரச்சினை தொடர்பாக அமனத்துல்லா வீட்டுக்கு சென்று முறையிட்டபோது, அங்கிருந்த இளைஞரை ஏவி பாலியல் பலாத்காரம் செய்து கொலைசெய்துவிடுவதாக மிரட்டினார் என்றும் போலீஸாரிடம் தெரிவித்த புகாரில் அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply