பா.ஜ, நாடுமுழுவதும் கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கையை நேற்று துவக்கிவைத்தது. உ.பி. மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையை துவக்கினார். இந்நிலையில் ஆந்திரத்தில் பா.ஜ.வில் உறுப்பினர் சேர்க்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஐதராபாத்தில் துவக்கிவைத்தார். அப்போது ஆந்திரா முன்னாள் துணை முதல்வரும், காங். மூத்த தலைவருமான பாஸ்கர ராவ், தனது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக் கானோருடன் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ. வில் இணைந்தார்.

Comments are closed.