2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு அரசியல்கட்சிகள் தயாராகி வருகிறது. 80 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில் அதிக தொகுதியை பிடிக்க வேண்டும் என்று பா.ஜனதா மற்றும் எதிர்க் கட்சிகள் தரப்பில் வியூகம் வகுக்கப்படுகிறது. காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் மகாகூட்டணியை அமைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது,

தொகுதி பங்கீடு தொடர்பாக சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் இடையே சாதகமான பதில்கள் இல்லையென்று கூறப்படுகிறது. பெட்ரோல், டீசல்விலை உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் அறிவித்த போதும் இந்த இருகட்சிகளிடம் இருந்தும் பெரும் ஆதரவு எதுவும் கிடையாது என்றே தெரிந்தது.

 

இதற்கிடையே உ.பி. மீண்டும் ஆதிக்கம்செலுத்த வேண்டும் என்று வியூகத்துடன் பா.ஜனதாவும் களமிறங்குகிறது. பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் பேசுகையில், “பல்வேறுவிஷங்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறது, பா.ஜனதா கூட்டணி அரசு 3-2 மெஜாரிட்டியை பெறும், பா.ஜனதா மட்டும் 300க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிப் பெறும்,” என்று தெரிவித்துள்ளார். 

 

காங்கிரஸ் கட்சியின் மகா கூட்டணியை சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் ஏற்கவில்லை எனவே காங்கிரஸின் நிலை மோகமாக அமையும். இதனை நான் சொல்ல முடியாது, இருப்பினும் காங்கிரஸ் அமேதி தொகுதியிலும் தோல்வியை தழுவலாம், ராகுல் காந்தி அவருடைய தொகுதியை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், இப்போது பிரச்சனையாகியுள்ள பெட்ரோல், டீசல் விலையெல்லாம் ஒரு பிரச்சனையாகவும் அமையாது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published.