சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பால்ராம்ஜி தாஸ். திடீர் உடல்நலக் குறைவு காராணமாக 90 வயதான இவர்  அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பால்ராம்ஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் பாஜக.வின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தவர்.

பஞ்சாப் மாநிலத்தின் துணைமுதல்வராகவும், 6 முறை எம்.எல்.ஏ பதவியும் வகித்த மூத்த அரசியல் தலைவரான இவர், கடந்த 2014-ம் ஆண்டு முதல் சத்தீஸ்கர் மாநில ஆளுநராக பதவிவகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply