பா.ஜ.க., மாநில பொதுச் செயலாளர மோகன் ராஜூலு. நேற்று மாலை மதுரையில் இருந்து திருச்சி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

காரை விவேக் என்பவர் ஓட்டினார். அவருடன் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் சுரேந்திரன் மற்றும் பாதுகாப்பு போலீசார் சென்றனர்.

அவர்களது கார் துவரங் குறிச்சியை அடுத்த மதுரை மாவட்ட எல்லையான புழுதிப் பட்டி பகுதியில் சென்றபோது, சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி திடீரென பின்நோக்கி வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த கார்டிரைவர் காரை வலது புறம் திருப்பினார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியகார், சாலையில் கவிழ்ந்தது. இதில் மோகன்ராஜூலு தலையில் படுகாய மடைந்தார். டிரைவர் விவேக், சுரேந்திரன், பாதுகாப்புபடை போலீசார் 2 பேரும் காயமடைந்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விரைந்துவந்த போலீசார் அவர்களை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். காயமடைந்த மோகன் ராஜூலு இப்போது உடல்நலம் தேறிவருகிறார்

இதுகுறித்து மதுரைமாவட்டம் புழுதிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply