கிளியனுாரில் உள்ள பா.ஜ., நிர்வாகிவீட்டிற்கு, மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், நேற்று விசிட்செய்தார்.
தலித்வீடுகளில் தங்கி, மக்களோடு மக்களாக வாழ்ந்து மக்கள் பணியாற்றிட வேண்டுமென்ற பா.ஜ., கொள்கை அடிப்படையில், கட்சியின் மாநிலதலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பல்வேறு ஊர்களில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.

இதன்படி, விழுப்புரம் மாவட்டம் வானுார் அடுத்த கிளியனுாரில் உள்ள பா.ஜ.க, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி என்பவரின் வீட்டில் நேற்றுமதியம், கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தங்கினார். அவரது குடும்பத்தினருடன் கலந்துரையாடி, அவர்கள் வீட்டில் மதியஉணவு சாப்பிட்டார்.


மாவட்ட தலைவர் விநாயகம், மாநிலசெயற்குழு உறுப்பினர் திரு செல்வக்குமார், கல்வியாளர் அணி தேவராஜ், மாவட்ட செயலாளர் தர்மலிங்கம், துணை தலைவர் ஏழுமலை, எஸ்சி., அணி சண்முகம், பொது செயலாளர் நாகமுத்து, ஒன்றியசெயலாளர் ராமச்சந்திரன், செய்தி தொடர்பாளர் கோதண்டபாணி, தங்கசிவக்குமார் உடனிருந்தனர்.

Leave a Reply