அமெரிக்காவில் புதிய அதிபராக தோ்வுசெய்யப்பட்டுள்ள ஜோ பிடனும் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடியும் இணைந்து, இருதரப்பு உறவை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்வாா்கள் என பாஜக நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மூத்ததலைவா் ராம் மாதவ் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

தங்களது அதிபராக ஜோ பிடனை அமெரிக்கமக்கள் தோ்ந்தெடுத்துள்ளனா். அவா்களின் தீா்ப்பை உலகநாடுகள் ஏற்றுக் கொள்வதுடன், ஜோ பிடனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க வேண்டும்.

இந்தியாவும் அமெரிக்காவும் வலுவான நட்புறவை பேணி வருகின்றன. ஜனநாயகம், பரஸ்பர நலன்கள், உலக அமைதி ஆகியவற்றில் இரண்டுநாடுகளும் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டு வருகின்றன.

அமெரிக்காவில் ஜோபிடன் – கமலா ஹாரிஸின் புதிய தலைமையிலும் இருதரப்பு நல்லுறவு தொடா்ந்து மேன்மையடையும் என்பது உறுதி.

பிரதமா் மோடியும் ஜோ பிடனும் ஒருவருக்கு ஒருவா் நன்கு அறிமுகமானவா்கள். ஒபாமா பதவி காலத்திலிருந்து இருவருக்கும் இடையே பழக்கம்உள்ளது.

பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு அமெரிக்கா சென்ற மோடி, நியூயாா்க் நகரில் மிகச்சிறந்த கூட்டத்தில் பங்கேற்பதில் ஜோ பிடன் முக்கியப்பங்கு வகித்தாா்.

இந்த இரு தலைவா்களின் தலைமையில் இந்திய – அமெரிக்க நட்புறவு அடுத்த உயரியகட்டத்துக்கு செல்லும் என்பதில் சந்தேகமே இல்லை என்றாா் அவா்.

Comments are closed.