அன்பிற்கும் ,பெருமதிப்பிற்கும் உரிய முன்னால் நிதிஅமைச்சர் திரு.சிதம்பரம் செட்டியார் அவர்களுக்கு ,வணக்கங்கள்.தாங்கள் பேசிய ஓர் ஒளிஒலி பதிவை கண்டு எழுத ஆசைப்படுகிறேன்.

அதற்கு முன் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது ,புத்திரன் சோகமாய் உள்ளபோது தந்தையால் சரியாக பேசமுடியாது ,அதுவும் இந்திய தேசத்திற்கே நிதியமைச்சராய் இருந்த தங்களின் மனநிலையையும் புரிந்து கொள்ளமுடிகிறது.

இராமசாமிநாயக்கரை தாங்கள் போற்றுவது உங்கள் விருப்பம் ,(காங்கிரஸை தமிழகத்திலிருந்து துறத்தியவரை )ஆனால் பிராமணிய ஆதிக்கம் என உளறுவதை ஒரு பிராமணனாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.தாங்கள் கூற்று சரியாக இருந்தால் கேட்கலாம் ,பிதற்றலை ஏற்க முடியாது.

இந்திய தேசம் சுதந்திரம் அடையவேண்டும் என போராடிய அன்றைய காங்கிரஸில் ,முதன் முதலாக தீர்மானம் போட்டவர் தமிழகத்தை சேர்ந்த ஜி.சுப்ரபணியம் ஐயர் ஆவார் ,அதன்பின்,அதன் முன் பெயர்களை குறிப்பிட வேண்டுமெனில் தனிபுத்தகம் தேவை ,உங்கள் கட்சி வரலாற்றை நன்கு படித்து விட்டு பிறகு பேசுங்கள் ,பிராமண ஆதிக்கமா ,பிராமணனின் அர்ப்பனிப்பா என ???

ஒருகட்சி ,தன் கட்சி உறுப்பினர்களை சோர்வு கொள்ள வைக்காமல் இருக்க அதன் எதிர்கட்சியை வசைபாடுவது இயல்பே ,ஆனால் தங்கள் குற்றசாட்டு ஊழல் சம்மந்தமாகவோ ,ஆதரபூர்வ குற்றசாட்டாவகவோ இருந்தால் அது உத்தமம்.

ஊழல்குற்றசாட்டுகள் இல்லாததற்கு இந்துத்வா,பிராமணீயம் காரணம் ,அதற்காகவே அவ்வாறு இந்துத்வாவையும் ,பிராமணீயத்தையும் பேசுவதாக எடுத்துக்கொள்ள வேண்டுமா ,என யூகிக்கிறேன்.

தமிழக காங்கிரஸின் முதல்வராக இருந்த மூதறிஞர், இராஜாஜி,சத்தியமூர்த்தி போன்றவர்கள் ஆதிக்கத்தால் வந்தார்களா,அர்பனிப்பால் வந்தார்களா என கூறவேண்டும்.

தேசசுதந்திரத்திற்காக போராடிய காங்கிரஸ் வேறு ,தற்போது உள்ள காங்கிரஸ் வேறு என்பதை அடிக்கடி நிரூபித்து உள்ளீர்கள் ,தேசசுதந்திரத்தை வேண்டாம் என கூறிய ஈரோட்டு கிழவரை புகழ்ந்து.

அன்புடன் இரா.வி.மதுசூதனன் அய்யர்,
சமூக சேவகர் ,முதனைகிராமம்.

Leave a Reply

Your email address will not be published.