சபரிமலை கோவில் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  கேரள முதல்வர் பினராயி விஜயன் வீடு நோக்கி பேரணியாகச் சென்றனர் பாஜகவினர் .

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்துவயது பெண்களுக்கும் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது.  இந்ததீர்ப்பை அமல்படுத்தும் முயற்சியில் கேரள மாநில அரசு தீவிரமாக களம் இறங்கியது.

கேரள அரசுக்கு எதிராக  பா.ஜனதாவும், இந்து அமைப்புகளும் போராட்டத்தை தீவிரப் படுத்தியது. இதன் காரணமாக சபரி மலை கோவில் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது.

இந்நிலையில் சபரிமலை கோவில் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  கேரள முதல்வர் பினராயி விஜயன் வீடுநோக்கி பாஜகவினர் பேரணியாகச் சென்றனர்.
இச்சம்பவத்தினால் அங்கு பரபரப்பு நிலவியது.

Leave a Reply

Your email address will not be published.